Ethennavum Jeeyasum Yar? Arivu Marrum Porin Kirekka Theyvangal — Venthan (Inthiran) Marrum Thamizh Pallarkaludan Avarkalin Thodarpu | ஏதென்னாவும் ஜீயஸும் யார்? அறிவு மற்றும் போரின் கிரேக்க தெய்வங்கள் — வேந்தன் (இந்திரன்) மற்றும் தமிழ் பள்ளர்களுடன் அவர்களின் தொடர்பு

Ethennavum Jeeyasum Yar? Arivu Marrum Porin Kirekka Theyvangal — Venthan (Inthiran) Marrum Thamizh Pallarkaludan Avarkalin Thodarpu | ஏதென்னாவும் ஜீயஸும் யார்? அறிவு மற்றும் போரின் கிரேக்க தெய்வங்கள் — வேந்தன் (இந்திரன்) மற்றும் தமிழ் பள்ளர்களுடன் அவர்களின் தொடர்பு — Tamil heritage article cover image

By ranadheerapandiyan07@gmail.com

கிரேக்க இந்திரன் ஜீயஸ் புகைப்படம்

தமிழகத்தில் மழை தெய்வமான இந்திரனின் மகளான தெய்வானையை போல், கிரேக்க இந்திரன் (ஜீயஸ்) மகளான, இன்றைய ஏதென்ஸ் என்ற பிராந்தியத்தின் நினைவாக உள்ள 'ஏதேன்னா' என்ற பெண் கடவுளை 'பள்ளர்' என்றே கிரேக்க இலக்கியங்கள், வரலாற்று குறிப்புகள் குறித்து வைத்துள்ளன

உழவு மற்றும் போர் கடவுளான பெண் தெய்வம் ஏதென்ன பள்ளா

கிரேக்கர்களின் போர் கடவுள் 'ஏதென்ன பள்ளா' சுருக்கமாக 'பள்ளா'. ரோமானியர்கள் இந்த பெண் தெய்வத்தை 'அறிவின் கடவுளாக' (தமிழ் இலக்கியத்தில் சரஸ்வதி என்று பொருள் கொள்ளவும்) கொண்டு, தங்களது இந்திரனான ஜூபிடர் மற்றம் ஜூனோ என்பதற்கு அடுத்த படியாக ஏதென்ன பள்ளாவை வழிபட்டனர். கிரக்கர்கள் எதேன்னாவை அறிவின் கடவுளாகவும்,கலைகளின் கடவுளாகவும் (தமிழில் சரஸ்வதி) வழிபட்டனர். குறிப்பாக நெசவு மற்றும் ஆடை நெய்தலின் கடவுளாக வழிபட்டனர். ஏதேன்னா கிரேக்க இந்திரனான ஜீயசுக்கு மிகவும் பிடித்தமான மகளாக இருந்திருக்கிறாள். ஏதேன்னா இந்திரனின் தலையில் இருந்து உதித்தவள் என்றும், அவள் போர் கோலம் பூண்டவாறு காட்சி அளிக்கிறாள் என்றும் கிரேக்க புராணம் கூறுகிறது. இந்த பெண் தெய்வம் தலையில் கவசமும், கையில் கதை ஆயுதமும், கேடையமும் கொண்டு காட்சி தருகிறாள். இவள் தனது தந்தையை போலவே இந்த பெண் தெய்வமும் தனது உடலில் கவசத்துடன் காட்சி தருகிறாள். அந்த கவசத்தில், 'உலுக்கினால் இடையையும் மின்னலையும் உருவாக்கும்' பாம்புகள் நெளியும் வண்ணம் உள்ளன. இவள் மற்றொரு போர் கடவுளான 'அரியஸ்' இல் இருந்து முற்றிலும் வேறுபடுகிறாள். இவள் நாடு நகரங்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள். இவள் போருக்கும் மற்றும் இன்றி அமைதிக்குமான கடவுளாகவும் விளங்குகிறாள். வேளாண்மையை கண்டறிந்தவலான இவள், மக்களுக்கு எருதினை பூட்டி ஏர் உழவும் கற்று கொடுக்கிறாள். ஏதென்ஸ் நகரம் 'ஏதென்ன பள்ளாவின்' துதி பாடும் முக்கிய நகரம் ஆகும். அந்த நகரை உருவாக்கிய பள்ளாவின் பெயரிலேயே அந்த நகரம் (ஏதென்ஸ்) அழைக்க பட வேண்டும் என்று கிரேக்க இந்திரன் ஜீயஸ் கட்டளை இட்டார். கிரேக்க மக்களின் விருப்ப பயிரான 'ஆலிவ்' விதையை ஏதென்ன பல்லாவே விதைத்தாள். இதன் பலனாக ஜீயஸ், எதெனனவுக்கெ அந்த நகரை கொடுத்ததோடு மட்டும் இன்றி, அந்த நகருக்கு அவளின் பெயரையே சூட்டினார். இதன் காரணமாக ஏதேன்னா இன்றும் அமைதியின் சின்னமாக ஆலிவ் இலைகளுடன் காட்சி தருகிறாள்.

image
image
image
image

← Back to all articles